இந்த நன்னாளில் நமக்கெல்லாம் உயிர் கொடுக்கும் உழவுக்கு நாம் உயிர்கொடுப்போம்… உழவர்ப்பொருட்களை சந்தைப்படுத்த சாதகங்களை பேசுவோம், தேவையான சாதனங்களை உருவாக்குவோம், ஊர்சந்தைக்கு மட்டுமல்ல, மின் சந்தைக்கும் கொண்டு செல்வோம்… தெருவில் இறங்கி வணிகம் செய்ய உழவர் பெருமக்களை தயார்செய்வோம்… இலாபகரமான விவசாயம் சாத்தியமே, அதனை கற்போம், கற்பிப்போம்…
நம் பொருளாதாரம் நம்மிடம் தங்க, ஒவ்வொருவரும் தன் தயாரிப்புகளை, உற்பத்தி பொருட்களை தாங்களே சந்தைபடுத்த தயாராக இருக்க வேண்டும்… அடுத்த தலைமுறையையாவது ‘மார்கெடிங் நாய்பொழப்பு’ என்று சொல்லி வளர்க்காமல், அது தான் நம் பொழப்பே என்று சொல்லி வளர்க்க வேண்டும். அந்த பொழைப்பு பிழைக்க தெரிந்ததால்தான் அயலான் இன்னும் நம்மை ஆண்டுகொண்டிருக்கிறான்… நாம் ஆள வேண்டுமானால், நாம்தான் தெருவுக்கு இறங்க வேண்டும்… போராட அல்ல, பொருளாதாரம் சிறக்க…
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்… தைத் திருநாள், உழவர் திருநாள் என நம் கலாசாரத்தையும், பெருமையையும் பறைசாற்றும் விழா…
-‘பாசிடிவ்’ பெருமாள்