positive perumal training for early entrepreneurs and business owners
இதுவரை சுமார் 4000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் நமது “பாடங்கள் வழங்கிடாத பாடங்கள்” பயிற்சி பட்டறையில் பங்கேற்று பயனடைந்துள்ளனர். வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு துறைகளில், வெவ்வேறு ஊர்களில் இருந்தும் வந்து இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொள்கின்றனர். இப்படியான சுய தொழில் முனைவோருக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறையை தமிழில் தொடர்ந்து நாம் நடத்தி வருகின்றோம்.
 
positive perumal training chennai pudhucherry
 
சமீபத்தில் இந்த நிகழ்விற்கான வரவேற்பும், நேர்மறையான விமர்சனங்களும், பரிந்துரைகளும் கூடியிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. கடந்த ஞாயிறு அன்று, புதுச்சேரியில் சுமார் 50க்கும் மேற்பட்ட முதல் மற்றும் இளம் தலைமுறை தொழில் முனைவோர்கள் இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர். மிகசிறந்த அனுபவங்களை வெளிப்படுத்தினர். சிறப்பாக கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டனர். தத்தமது இலக்குகளை அடைய சபதம் ஏற்றனர். மிக்க மகிழ்ச்சி!
 
எனது நலம் விரும்பி மற்றும் வழிகாட்டி ஒருவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அவர் என்னிடம் “தாங்கள் வழங்கும் இந்த பயிற்சியின் தரம், வேகம், ஆழம், விளைவுகள், பங்கேற்பாளர் ஒருவரின் ஈடுபாடு போன்றவை மிகவும் கூடியிருக்கிறது, வளர்ச்சியடைந்திருக்கிறது” என்பதை சுட்டி கட்டினார். மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருவதை பாராட்டினார். ஆனால், அவ்வாறான கட்டணங்களை உயர்த்த சொல்லியும் பரிந்துரைத்தார். மதிப்புகள் புரிய வேண்டுமானால், சரியான தகுதியான நபர்களிடம் இவை சென்று சேரவேண்டுமானால் கட்டணங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என விவரித்தார். அவை உண்மைதான்… சில சமயங்களில் விலையை பொறுத்து தரத்தை மக்கள் மதிப்பிடுகின்றனர்…
 
மேலும், முன்னர் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொண்டவர்கள் பலரும் இப்பொழுது அதற்கான பலன்களை அனுபவிப்பதை பற்றி என்னோடு பகிர்ந்தும் வருகின்றனர். அவர்கள், அவர்கள் குடும்பத்தாரையும், நண்பர்களையும், பங்குதாரர்களையும், வணிக கூட்டாளிகளையும் இந்த பயிற்சி பட்டறைக்கு தொடர்ந்து பரிந்துரைத்த வண்ணம் இருக்கின்றனர். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
இந்த பயிற்சி பட்டறையில் வழங்கக்கூடிய கருத்துக்களை மக்கள் கேட்கும்போதும், அதனை உணரும் போதும், ஏதோ இந்த தருணத்திற்காகவே அவர்கள் காத்திருந்தது போல் ஆரவாரம் செய்கிறார்கள். ஏதோ அவர்களுக்கு பணம் ஈட்ட நாம் அனுமதி கொடுத்தது போல் உணர்கிறார்கள். ஏன் இப்படி உணர்கிறார்கள்?
 
அவரவர் மனநிலையில் பணம் ஈட்டவும், செல்வம் சேர்க்கவும், செல்வந்தர் ஆகவும், தொழில்முனைவோராகவும், தொழிலதிபர் ஆவதற்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அவர்கள் மனதில் மட்டுமல்ல, அவர்களின் சூழ்நிலையிலும் கூட. நமது குடும்பமும், பள்ளிகளும், கல்லூரிகளும், நம் உறவினர்களும், அண்டை வீட்டாரும், நண்பர்களும், சமூகமும், அரசியலும், சமூக ஊடகங்களும், தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் ஏதோ ஒரு வகையில் பணத்திற்கு எதிராகவும், பணக்காரர்களுக்கு எதிராகவும், வணிகம் வியாபாரம் போன்றவற்றிற்கு எதிராகவும், ஒருவித எதிர்மறை மன நிலையை உண்டாக்கியிருக்கிறார்கள். அவ்வாறான எதிர்மறை பிரச்சாரங்களை தொடர்ந்து முன்னெடுக்கவும் செய்கின்றனர். அதனால் நாம் நமக்குள்ளாகவே உளவியல் ரீதியாக செல்வந்தராகவும், தொழில்முனைவோராகவும், வெற்றிகரமான தொழிலதிபராகவும் பரிணமிக்க அனுமதி மறுக்கப்பட்டவர்களாக தொடர்ந்து உணர்கின்றோம்.
அவை, இந்த பயிற்சி பட்டறையில் உடைபடுகின்றன. மனத்தடைகள் தவிடு பொடியாகின்றன.
 
உலகில் வாய்ப்புக்களுக்கு ஏதும் பஞ்சமில்லை. வசதிகளுக்கு ஏதும் பஞ்சமில்லை. நல்ல மக்களுக்கும், உறவுகளுக்கும் ஏதும் பஞ்சமில்லை. பஞ்சமெல்லாம் நம் மனதில்தான், பற்றாக்குறை எல்லாம் நம் எண்ணங்களில்தான். அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி, தகர்த்தெறிந்து பல்வேறு பொருளாதாரம் சார்ந்த வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் அடிகோலுகிறது நமது “பாடங்கள் வழங்கிடாத பாடங்கள்” பயிற்சி பட்டறை.
 
மக்கள் கொடுக்கும் ஆதரவும், வரவேற்பும், அங்கீகாரமும் ஒருவித பயத்தையும், அதே சமயத்தில் பெரிய சமூக பொறுப்பையும் எனக்குள்ளாக உணரச் செய்கிறது.
 
நிச்சயம் அடுத்த படி எடுப்போம், சொன்னபடி முடிப்போம், எண்ணப்படி வாழ்வோம்!
 
நன்றிகள், வாழ்த்துக்கள்!
‘பாசிடிவ்’ பெருமாள்
 
Short Description in English: Business Coaching and Training Program in Tamil for SME Business Owners in Chennai by Positive Perumal, Conducting Marketing and Sales Training programs in Chennai, Pudhucherry, Coimbatore, Trichy, Madurai, Salem, Erode. Positive Perumal Training will help SME business owners, early entrepreneurs to grow their business.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *