tamilar parinthurai vanigam special guest
கடந்த வாரம் வேளச்சேரி “தமிழர் பரிந்துரை வணிகம், குழு 11” – இல் சிறப்பு விருந்தினராக “வணிகர்களுக்கான தற்போதைய பார்வை” தலைப்பில் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினேன்.
 
வணிக பெருமக்களோடு நேரம் செலவிடுவது அனுபவம் சேர்க்கும் அற்புத தருணங்கள் ஆகும். கற்றுக்கொள்ள நிறைய இருக்கும். அத்தனையும் அனுபவப் பாடங்கள். அவர்களுக்கு உதவுவதும், துணை நிற்பதும், அவர்களோடு பயணிப்பதும் இனிய அனுபவம், மகிழ்ச்சி.
 
குழுவின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி. அழைப்பு விடுத்து கௌரவித்த திரு.ஜாகோப், தலைவர் அவர்களுக்கும் நன்றிகள்…
 
“தமிழர் பரிந்துரை வணிகம், குழு 2” இல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் திரு. சிவக்குமார், பெஸ்ட் சர்விஸ் ரியாலிட்டி அவர்கள் வாய்ப்பு வழங்கினார் என்பது நினைவு கூறத்தக்கது. “தமிழர் பரிந்துரை வணிகம்” பல குழுக்கள் சென்னை மற்றும் தமிழகமெங்கும் வளர்ந்திருப்பதும், வளர்ந்து வருவதும் பெருமைக்குரியதாகும்.
 
#TamilKeyNoteSpeaker #TamilMotivationalSpeaker #TamilBusinessTips #SMEBusinessTraining
 
https://positiveperumal.com/positive-perumal-blog-review-comments/