நமது இனிய நண்பர் திரு. குளோபல் ஸ்டார் ரகு அவர்கள் இந்த இணைப்பை ஏற்படுத்தி இருந்தார். 30 நிமிடங்கள் வரை அவர்களோடு பேச, பழக வாய்ப்பு கிடைத்தது. கோதண்டம் அண்ணன் அவரது அனுபவங்களை என்னிடம் நிறைய பகிர்ந்து கொண்டார். எனக்கும் Personal Branding சம்மந்தமாக யோசனைகளை வழங்கினார். முல்லை கோதண்டம் இருவருமே பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர்களாக இருக்கிறார்கள். சிறப்பான மற்றும் மகிழ்வான தருணம்…
AdiYogi நிறுவனத்தின் ஒரு நாள் கருத்தரங்கின் ஒரு பகுதியாக காமெடி கலாட்டா நிகழ்ச்சி “சொத்துதான் கெத்து” என்கிற தலைப்பில் நடந்தது. அதில் இருவரும் கலகலப்பான நிகழ்வை நடத்தினர்.
அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, ஆதியோகி நிறுவனர் டாக்டர். மணிக்கண்ணன் அவர்கள் நமது “பணம் மனம் ஞானம்” புத்தகத்தை முல்லை கோதண்டம் ஜோடிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
மொத்த நிகழ்வை தொகுத்து வழங்கி தன் தனி திறமையை வெளிப்படுத்திய திரு. குளோபல் ஸ்டார் ரகு அவர்களுக்கும், வாய்ப்பளித்த திரு. ரத்தினாபால், முதன்மை செயல் அதிகாரி அவர்களுக்கும் நன்றி! நன்றி!