ஆசிரியர் அறியாமை இருளைப் போக்கும் கலங்கரை விளக்கம்!
ஆசிரியர்கள் விதைகளை விருட்சமாக்கும் வித்தைக்காரர்கள்!
ஆசிரியர்கள் சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றுகிறவர்கள்!
ஆசிரியர்கள் படிப்பவர்களை படைப்பாளிகளாக உருமாற்றுபவர்கள்!
ஆசிரியர்கள் நமது மூளையின் ஒரு பகுதியாகவும், இதயத்தின் ஒரு பகுதியாகவும் நிரந்தரமாக குடியிருப்பவர்கள்!
ஆசிரியர்கள் நம்மை அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்திற்கு அடிகோலிட்டு அழைத்துச் செல்பவர்கள்!
ஆசிரியர் தொழில் வெறும் பிழைப்பல்ல,
அது ஒரு பொறுப்பு,
அது ஒரு வரம்,
அது ஒரு கொடுப்பினை,
அது ஒரு பெருமை,
அது ஒரு களிப்பு…
ஆசிரியர்கள் படைப்பாளிகள். ஆம், வருங்கால உலகை அவர்கள்தான் படைக்கிறார்கள்!
ஆசிரியர்களுக்கு கடவுளுக்கு நிகரான பொறுப்பு இருக்கிறது.
இங்கே பாடங்கள் முக்கியமல்ல, படிப்பினைகள் தான் முக்கியம்.
எங்களுக்கு பாடத்திட்டம் முக்கியமல்ல, பாடம் எடுக்கும் ஆசிரியர்தான் முக்கியம்.
இந்த இனிய நன்னாளில் என் ஆசிரிய பெருமக்கள் அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை சிரம் தாழ்ந்து அர்ப்பணிக்கிறேன்!
இந்த ஆசிரியர் தின நன்னாளில் என் ஆசிரியர்களுக்கு நன்றியையும், அதே சமயத்தில் இன்றைய ஆசிரிய சமூகத்தில் என்னுடைய எதிர்பார்ப்பையும் இங்கே பதிவிடுகிறேன்.
ஆசிரியரை மதிக்காத சமூகம் விரைவில் அழிந்து ஒழியும்,
ஆசிரிய பெருமக்களை சாடுவதும், அவர்களை நிந்திப்பதும்,
அவரை மதியாதிருப்பதும்,
அவருக்கு தரவேண்டிய மரியாதை கொடுக்காமல் இருப்பதும்,
மாணவர்களை கண்டிக்கும் சுதந்திரத்தை தடுப்பதும் நமது வருங்கால சந்ததியை சந்ததி இல்லாமல் செய்யப்போகிறது.
ஆசிரியர்கள் மட்டுமே நம்மை வாழ்வின் அத்தனை இடர்பாடுகளிலிருந்தும் மீட்டெடுக்கும் வல்லமை கொண்டவர்கள்.
ஆசிரியர் சமூகத்தை மதிப்போம், வணங்குவோம், போற்றுவோம்.
நல்லனவே எதிர்பார்ப்போம்.
இது என் சமூகத்திற்கான ஆசிரியர் தின கோரிக்கை…
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
‘பாசிடிவ்’ பெருமாள்