

காமராஜர் அரங்கம், ஆம், அது ஒரு கனவு அரங்கம். உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை மேடை ஏற்றி அழகு பார்த்த ஓர் அரங்கம். எனக்கும் அந்த கனவு இருந்தது. அந்த மேடையில் சிறப்பு விருந்தினராக, சொற்பொழிவாளராக அல்லது ஒரு சாதனையாளராக மேடை ஏற வேண்டும் என்று…
ஆம், காலம் கனிந்தது, கனவு பலித்தது. நேற்றைய முன் தினம் நடந்த மாபெரும் விழா ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுமார் 20 நிமிடங்கள் வரை “குழு வளர்ச்சியே வணிக வளர்ச்சி” என்கிற தலைப்பில் சிற்றுரையாற்றினேன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
பகல் கனவு பலிக்கும் 


வாய்ப்பு அளித்த இனிய நண்பர் திரு. ரத்னா பால் மற்றும் ஆதியோகி நிர்வாக இயக்குனர் டாக்டர் மணிக்கண்ணன் அய்யா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!